கனடாவில் கல்விகற்கும் மாணவர்களுக்கு இந்திய துாதரகம் எச்சரிக்கை!

#world_news
கனடாவில் கல்விகற்கும் மாணவர்களுக்கு இந்திய துாதரகம் எச்சரிக்கை!

கனடா டொரொன்டோ நகரில் இந்திய சீக்கிய மாணவன் ஒருவன் கொல்லப்பட்டதையடுத்து இந்திய துாதுரகம் அங்குள்ள இந்திய மாணவர்களை எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளது,

கனடாவின் Nova Scotiaவிலுள்ள Truro நகரில், Prabhjot Singh Katri (23) என்ற இந்திய மாணவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றாலும், இது இன ரீதியான தாக்குதல் என இந்தோ கனேடிய சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரங்களில் ஆள் நடமாட்டமில்லாத இடங்களுக்கு தனியாக செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய தூதரகம், சந்தேகத்துக்குரிய மற்றும் இனவெறுப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிட்டால் உடனடியாக உள்ளூர் பொலிசாரிடம் புகாரளிக்குமாறும் இந்தியர்களை கேட்டுக்கொண்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4