பிரான்ஸ் பெண்களுக்கு ஓர் முக்கிய செய்தி!

#world_news #France
பிரான்ஸ் பெண்களுக்கு ஓர் முக்கிய செய்தி!

 பிரான்ஸ் நாட்டில் தற்போது வெளியாகியிருக்கும் ஒரு அறிவிப்பு பெண்களிடையே பெரும் வரவேற்பை பெறக்கூடும்

2022 ஜனவரி 1 முதல் 25 வயது வரையிலான பெண்களுக்கு கருத்தடை இலவசம் என சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியர் வேரன் (Olivier Veran) அறிவித்துள்ளார்.

2022 தேர்தல் பிரச்சாரத்திற்கு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனின் அரசாங்கம் தயாராகி வரும் நிலையில், இந்த கொள்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த புதிய நடவடிக்கையின் மூலம் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு 21 மில்லியன் யூரோ செலவாகும் என Olivier Veran குறிப்பிட்டுள்ளார். சில இளம் பெண்களிடையே கருத்தடை பயன்பாடு குறைந்து வருகிறது.

அதற்கு முக்கிய காரணம் நிதி என்று Olivier Veran தெரிவித்தார். மேலும், “பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாது என்பது தாங்கிக்கொள்ள இயலாத ஒன்று.

அதிக செலவாகும் என்பதால் அவர்கள் விரும்பினால் கூட கருத்தடை செய்ய முடியாத நிலை இருக்கிறது” என Olivier Veran கூறினார். பிரான்சில் இப்போது வரை கருத்தடைக்கான இலவச அணுகலுக்கான வயது வரம்பு 18 என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4