நாட்டின் சூழ்நிலை காரணமாக 07 நாட்களுக்கு தபால் நிலையங்கள் திறப்பு!

#SriLanka
Prasu
4 years ago
நாட்டின் சூழ்நிலை காரணமாக 07  நாட்களுக்கு தபால் நிலையங்கள் திறப்பு!

நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களும் இன்று (10) முதல் திறக்கப்படும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

ஓய்வூதியம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்குவதற்காக தபால் நிலையங்கள் திறக்கப்படுவதாக அவர் கூறினார்.

அதன்படி, இன்று முதல் ஏழு நாட்களுக்கு தபால் நிலையங்கள் திறந்திருக்கும்.

அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்களின் செப்டம்பர் மாத ஓய்வூதியங்கள் இன்று முதல் செலுத்தப்படும்.

அத்துடன் முதியோர் உதவித்தொகை, விவசாயிகளின் ஓய்வூதியம் மற்றும் மீனவர் ஓய்வூதியத்தை செலுத்துவதற்காகவும், தபால் மற்றும் உப தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4