சுவிஸ் பல்கலைக்கழகங்கள் விரிவுரைக்கு கொவிட் சான்றிதழை கோருகின்றன.

சுவிஸ் பல்கலைக்கழகங்கள் விரிவுரைக்கு கொவிட் சான்றிதழை கோருகின்றன.

சுவிற்சலாந்தில் Lausanne இற்கான சுவிஸ் மத்திய தொழில்நுட்ப நிறுவகம் (EPFL) மற்றும் Lausanne, Neuchâtel பல்கலைக்கழகங்கள் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் திறக்கும்போது நேரடி விரிவுரைகளுக்கு கொவிட் சான்றிதழ்கள் தேவைப்படும் என்று அறிவித்துள்ளன.

18 மாதகால முடக்கம் மற்றும் தொலை துார கற்றல் நடவடிக்கைகளுக்குப் பின்னர் தற்போது இலையுதிர்காலத்தில் இருந்து திறக்கப்படும் சுவிஸ் பல்கலைக்கழக வளாகங்களில், சுகாதார நடவடிக்கைகளின் கீழ் – நேரடி கற்பித்தல் முழுமையாக அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இப்போது வரை கொவிட் சான்றிதழ் இதில் எந்தளவு பங்கை வகிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கொவிட் சான்றிதழ் மாணவர்களுக்கு சிறந்த சுகாதார உத்தரவாதத்துடன் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கும். இது பல்கலைக்கழக உள்கட்டமைப்பை அதன் முழுத் திறனுக்கும் பயன்படுத்த அனுமதிக்கும்.  மாணவர்கள் பல்கலைக்கழக வாழ்க்கைக்கு திரும்ப இது அனுமதிக்கிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4