சுவிற்சலாந்து ஹெய்டியில் தமது பணியை நிறைவு செய்தது.

#world_news
சுவிற்சலாந்து ஹெய்டியில் தமது பணியை நிறைவு செய்தது.

சுவிற்சாலந்தானது அதனது அவசர உதவியை ஹெய்டியில் முடித்துள்ளது. ஹெய்டியானது ஆகஸ்ட் 24ல் பேராபத்து மிக்க புவியதிர்ச்சியால் தாக்கப்பட்டு சுமார் 2240 மக்களும் பல்லாயிரக்காணக்கான வீடுகளும் கொல்லப்பட்டும் அழிவுக்குட்பட்டும் கரிபியன் தீவுகளில் நடந்திருந்தது.

தற்போது சுவிஸ் அங்கு மீள் கட்டுமான பணிகளை மேற்கொள்ள எதிர்பார்க்கிறது.  பெடரல் வெளியுறவு திணைக்களத்தின் பிரிவான சுவிஸ் மனிதாபிமான உதவிப்பிரிவு, இந்த புவியதிர்ச்சியின் பின் அங்கு நிவராண வேலைகளுக்காக அனுப்பப்பட்டது.

அவர்கள் அங்கிருந்த சுவிஸ் துாதரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழுவுடன் இணைந்து கொண்டனர். இவர்கள் அங்கு 3 கிழமைகளாக குடிக்க நீர், நிவாரண பொருட்கள், பாடசாலைக்கட்டிடங்கள் மற்று தேவாலய பொது அலுவலக கட்டிடங்களின் உறுதித் தன்மையையும் கணிப்பீடு செய்துகொண்டனர்.

இந்த குழுவினர் அங்கிருந்த சுமார் 20000 மக்களுக்கு தமது உதவிகளை வழங்கியதாக பெடரல் வெளியுறவு திணைக்களம் வெள்ளியன்று தெரிவித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4