இரும்புச்சத்து நிறைந்த கோங்குரா தொக்கு

#Cooking
Reha
3 years ago
இரும்புச்சத்து நிறைந்த கோங்குரா தொக்கு

தேவையான பொருட்கள் :

கோங்குரா (புளிச்ச கீரை) - 2 கட்டு
கடலைப்பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 20
புளி - எலுமிச்சை அளவு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோங்குரா (புளிச்ச கீரை) இலைகளை மட்டும் கிள்ளி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.

இதை ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.

மீண்டும் எண்ணெய் விட்டு கோங்குராவை நன்கு சுருண்டு வரும் பதம் வரை வதக்கவும். கோங்குரா ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

இறுதியாகப் முதலில் அரைத்தவற்றை சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கிவிடவும்.

.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!