கேப்டன் பதவியிலிருந்து விலகும் விராட் கோலி

Prasu
3 years ago
கேப்டன் பதவியிலிருந்து விலகும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி, டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இந்தியாவுக்காக விளையாடியது மட்டுமல்லாமல், இந்திய அணியை வழிநடத்தியது எனக்கு கிடைத்த மிகப் பெரிய அதிர்ஷ்டம். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நான் இருந்த நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய அணி வீரர்கள், அணி நிர்வாக குழு, தேர்வுக் குழு, பயிற்சியாளர்கள் மற்றும் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என நினைத்த ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி. அவர்கள் இல்லாமல் நான் இதை செய்திருக்க முடியாது. 

வேலைப் பளு என்பது மிக முக்கியமான விஷயம் என்பதை புரிந்துகொள்கிறேன். கடந்த 8 முதல் 9 ஆண்டுகளாக நான் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருவதால் அதிக வேலைப் பளு இருப்பதை உணர்கிறேன். அதேபோல கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக அணியின் கேப்டனாக செயல்பட்டு வருவதாலும் வேலைப் பளு அதிகமாக உள்ளது. எனவே இந்திய அணியை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வழிநடத்த எனக்கு சற்று வேலை குறைப்புத் தேவைப்படுவதாக நினைக்கிறேன்.

அதன் பொருட்டு அக்டோபர் மாதம் துபாயில் நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடருடன் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். நான் கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக டி20 அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன் என ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!