நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடர் ரத்து
நியூசிலாந்து அணி நீண்ட காலத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட முடிவு செய்தது.
அதன்படி நியூசிலாந்து வீரர்கள் வங்காளதேசம் தொடரை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் சென்றனர். பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இன்று மதியம் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்க இருந்தது.
இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு சற்றுமுன் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக நியூசிலாந்து அணி பாகிஸ்தானை தொடரில் விளையாட முடியாது என அறிவித்தது. இதனால் தொடரை கைவிடப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அரசாங்கத்தின் பாதுகாப்பு எச்சரிக்கையை முன்னிட்டு, வீரர்களின் நலன்தான் முக்கியம் என்ற அடிப்படையில் நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு இந்த முடிவு எடுத்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ராவல் பிண்டியிலும், டி20 கிரிக்கெட் தொடர் லாகூரிலும் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.