கனடாவில் ஊழியர்களுக்கு 500 டொலர் போனஸ் வழங்கும் பல நிறுவனங்கள்

#Canada
Nila
4 years ago
கனடாவில் ஊழியர்களுக்கு 500 டொலர் போனஸ் வழங்கும் பல நிறுவனங்கள்

கனடாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊழியர்களுக்கு பல நிறுவனங்கள் பெரிய அளவில் போனஸ்களை வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், சில நிறுவனங்கள் புதிதாக தொழில் வழங்குவதாக அறிவித்துள்ளது.

கொரோனா பரவலையடுத்து தங்கள் செயற்பாடுகளை நிறுத்திய அமேசான் கனடா தற்போது தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக் கொண்டதனை உறுதி செய்யும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.

புதிய பணியாளர்கள் மற்றும் தற்போதைய ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக தாங்கள் 100 டொலர் ஊக்கத் தொகை ஒன்றை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அமேசான் கனடா தெரிவித்துள்ளது.

ஒட்டாவாவில் உள்ள புஷ்ட்டுகா நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பரியாற்றும் 120 ஊழியர்களுக்கு 500 டொலர் ஊக்கத் தொகை வழங்கியுள்ளது.

தாங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் 90 சதவீதமானோர் தற்போது வரையிலும் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ள நிலையில் 500 டொலர் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், பொப் லாட்டன் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதனை உறுதி செய்தால் மிகப்பெரிய போனஸ் ஒன்றை வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

போனஸை அறிவித்ததிலிருந்து, நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் இப்போது முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள் என பொப் லாட்டன் நிறுவனம் தெரிவித்தள்ளது.

இந்தநிலையில், இ-கொமர்ஸ் நிறுவனங்கள் 15000  கனேடிய பணியாளர்களை முழு நேர மற்றும் பகுதிநேர பணிக்கு ஊழியர்களை பணியமர்த்துவதாக குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊழியர்கள் 15000 பேருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்குவதாக இ-கொமர்ஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4