சமந்தாவை பற்றிய நாக சைதன்யாவின் ஓபன் டாக்....!!!

#TamilCinema
Keerthi
2 years ago
சமந்தாவை பற்றிய நாக சைதன்யாவின் ஓபன் டாக்....!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். அதற்கு மாமியார் வீட்டிலும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாகவே இவர்களின் விவாகரத்து செய்தி காட்டுத்தீயாய் பரவி வருகிறது,.

இதற்கு இருவரும் இதுவரை எந்த வித பதிலும் அளிக்காமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தனது கணவர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் லவ் ஸ்டோரி படத்தின் டிரைலர் வெளியானது. அதைப் பகிர்ந்த சமந்தா மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதற்கு படத்தின் நாயகி சாய்பல்லவி நன்றி தெரிவித்தார். ஆனால் நாக சைதன்யா எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும், லவ் ஸ்டோரி பட பத்திரிக்கையாளர் சந்திப்பில்

கலந்துகொண்ட நாக சைதன்யா, படத்தைப் பற்றி மட்டுமே கேள்வி கேட்கவேண்டும் என்றும் சமந்தாவைப் பற்றி எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளாராம். இதனால் ரசிகர்கள் இவர்களுக்குள் பிரிவு இருப்பது உறுதியாக தெரிகிறது என கூறி வருகிறார்கள்.