சுவிஸ் செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

#SriLanka #Airport #Flight
Yuga
4 years ago
சுவிஸ் செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கையர்கள் இலங்கைக்கு நேரடியாக விமானம் மூலம் வந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்திற்கு இடையிலான நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விமான சேவையை சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனம் மீண்டும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
 
எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் இந்த சேவை மீண்டும் அமலுக்கு வரவிருக்கிறது.
 
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வாரத்தின் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு விமான சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சுவிட்சர்லாந்தின் முன்னணி விமான நிறுவனமான Edelweiss Air விமான சேவை, இந்த பயண நடவடிக்கையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இந்த சேவை காரணமாக சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கையர்கள் இலகுவாக நாட்டுக்கு வந்து செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளமையால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை, நவம்பர் மாதம் முதல் இலங்கையில் இருந்து பாரிஸிற்கு நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4