IPL Update -மும்பை அணிக்கு 157 ஓட்டங்களை நிர்ணயித்த சென்னை அணி
ஐக்கிய அரபு அமீகரகத்தில் மும்பை மற்றும் சென்னை அணி மோதும் போட்டி நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டூப்ளிஸிஸ் மற்றும் ரூத்ராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்
அதில், 3 பந்துகளை எதிர்கொண்ட டூப்ளிஸிஸ் ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலியும் ரன் ஏதும் எடுக்காமல் மிலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் நிதானமாக ஆடி அணியை மீட்டெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அம்பதி ராயுடு ரிட்டயர் ஹர்ட் முறையில் ஆட்டத்திலிருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார்.
அவரும் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பொறுப்பற்ற ஷாட் அடித்து போல்ட் பந்து வீச்சில் ராகுல் சாஹரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் தோனி களமிறங்கினார். அவரும், 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மிலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தோனி, சுரேஷ் ரெய்னா என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம் ரூத்ராஜ் கெய்க்வாட் நிதானமாக ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடி ரன்களைச் சேர்ந்தார். நிதானமாக ஆடிய ஜடேஜா 33 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ட்வைன் ப்ராவோ அதிரடியாக ஆடினார். அவர் 8 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் எடுத்து இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார்.