சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கியமான காளான் ஊத்தப்பம் :

Prabha Praneetha
3 years ago
சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கியமான காளான் ஊத்தப்பம் :

காளான் ஊத்தப்பம் :

காளான், சோளம், கீரை மற்றும் மிளகு ஆகியவற்றைக் கொண்ட ஊத்தப்பம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது. அதுவும் இந்த காளான் த்தப்பம் பல சத்துக்களை கொண்டுள்ளது. இதை சர்க்கரை நோயாளிகள் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

தோசை மாவு - 2 கப்
வெங்காயம் நறுக்கியது - 2
நறுக்கிய குடைமிளகாய் - 1
பச்சை மிளகாய் நறுக்கியது - 1
கருவேப்பிலை நறுக்கியது - 1 கைப்பிடி
காளான், நறுக்கியது - 1 கப்
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை :

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், கருவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் காளான், கரம் மசாலா சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்.

தோசைக்கல்லில் 2 கரண்டி மாவை ஊற்றி, அதன் மேல் வதக்கிய காளான் மசாலாவை தூவவும். மிதமான சூட்டில் 3 நிமிடம் மூடி வைக்கவும். பின் திருப்பி போட்டு 1 நிமிடம் சுட்டு, சூடாக பரிமாறவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!