சத்தான கருப்பு உளுந்து கஞ்சி..உடல் மெலிவதற்கு ஓர் சிறந்த மருந்து ...

Prabha Praneetha
3 years ago
சத்தான கருப்பு உளுந்து கஞ்சி..உடல் மெலிவதற்கு ஓர் சிறந்த மருந்து ...

நமது முன்னோர்கள் காலத்தில் பெண்கள் மாதவிடாய் பிரச்சனை இல்லாமல் இயற்கையாகவே சுகப்பிரசவ பேறையும் கொண்டிருந்தார்கள் அதற்கு காரணமே கருப்பை கோளாறு இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை பெற்றிருந்தார்கள்.

அதற்கு காரணம் அவர்களது உணவு முறை தான். அதில் முக்கியமானது கருப்பு உளுந்து. வாரம் ஒருமுறை இந்த உளுந்து கஞ்சியை குடித்து வந்தால் கருப்பை கோளாறு இல்லாமல் தடுக்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

கருப்பு உளுந்து - 1 கப்

தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்

தூள் செய்யப்பட்ட கருப்பட்டி - அரை கப்

சுக்கு தூள் - 1 தேக்கரண்டி

ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

தண்ணீர் - 5 கப்


செய்முறை :

உளுந்தை வாணலியில் இட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து சிறிது ஆறவைத்து பொடி செய்து கொள்ளவும். இந்த மாவில் 1 கப் நீர், சிறிது உப்பு கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரையுங்கள்.

அடிகனமான பாத்திரத்தில் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள உளுந்து மாவை கலந்து, நன்கு வேகும் வரை கைவிடாமல் கிளறுங்கள்.

மாவு வெந்து வரும்போது பொடித்து வைத்துள்ள கருப்பட்டி, சுக்குத்தூள், ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு காய்ச்சவும்.

பின்னர் கஞ்சி காய்ச்சும் போது பக்கத்தில் கொதிக்கும் நீரை வைத்திருக்க வேண்டும். கஞ்சி இறுகும் போது அந்த கொதி நீரை ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மாவு நன்றாக வெந்ததும் சுவையான கருப்பு உளுந்து கஞ்சியை பரிமாறலாம்.

காலையிலோ  மாலையிலோ  சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த உணவு என கூறலாம் உடல் மெலிவதற்கு மிகவும் சிறந்தது .

தசைகள் பலம் பெறும்.  குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த கஞ்சியை கொடுத்தால் நல்லது. வயதானவர்கள் மாலை நேரத்தில் இந்த கஞ்சியை சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலை போக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!