அதிர்ஷ்டம் தரும் புரட்டாசி மாத பரிகாரங்கள்
உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கப் பிறந்த மனிதர்கள் ஒவ்வொரு வரும் பலவிதமான இன்னல்களை தினமும் சந்திக்கிறார்கள். 27 நட்சத்திரங்களுக்கும் மனிதர்களுடைய துன்பங்களை தீர்க்கும் சக்தி உண்டு.அதன் அடிப்படையில் கீழே தரப்பட்டுள்ள எளிய பரிகாரங்களை பயன்படுத்தி வெற்றி பெற மாலை மலர் வாழ்த்துகிறது.
புரட்டாசி-1- (17-ந் தேதி,வெள்ளிக்கிழமை)
நட்சத்திரம்: திருவோணம்
- சுக்கிரன், சந்திரனின் ஆதிக்கத்தை பிரதிபலிக்கும் இந்த நாளில் காலை 8 மணி முதல் -9 மணி வரையான சந்திர ஒரையில் மல்லிகைப் பூ சாற்றி மாரியம்மனை வழிபட்டால் மாமியார்- மருமகள் பிணக்கு, தாய்-மகள் கருத்து வேறுபாடு மறையும்.
புரட்டாசி-2- (18-ந் தேதி, சனிக்கிழமை)
நட்சத்திரம்: அவிட்டம்
- சனி, செவ்வாய் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் மாலை 4.30 - மணி முதல் 6 மணி வரையான சனிப் பிரதோஷ நாளில் நந்தியம் பெருமானுக்கு கரும்புச்சாறு அபிசேகம் செய்து வழிபட்டால் தீராத வழக்கு, சொத்து பிரச்சினைகள் தீரும்.
புரட்டாசி-3- (19-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் : சதயம்
- சூரியன்,ராகுவின் ஆதிக்கம் மிகுந்த இந்த நாளில் மாலை 4.30 மணி முதல் -6 மணி வரையான ராகு வேளையில் நெய் தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட்டால் தந்தை மகன் பிணக்கு, இருதய நோய், பார்வை குறைபாடு ராகு/ கேது தோஷம், கால சர்ப்ப தோஷத்தின் தன்மை குறையும்.
புரட்டாசி-4- (20-ந் தேதி, திங்கட்கிழமை)
நட்சத்திரம்: பூரட்டாதி
- குருச்சந்திர யோகமும் பவுர்ணமியும் இணைந்த நாளில் பிராமணர்களுக்கு உணவு, உடை தானம் தந்தால் தன வரவு தாராளமாகும்.
புரட்டாசி-5- (21-ந் தேதி, செவ்வாய்க்கிழமை)
நட்சத்திரம்: உத்திரட்டாதி
- செவ்வாய், சனி ஆதிக்கம் இணைந்த நாளில் இரவு 8-மணி முதல் 9 மணி வரையான செவ்வாய் ஓரையில் முருகனுக்கு அரளி மாலை அணிவித்து வழிபட்டால் விபத்து, கண்டம், தீராத, இனம் புரியாத நோய் குணமாகும்.
புரட்டாசி-6- (22-ந் தேதி, புதன்கிழமை)
நட்சத்திரம்: ரேவதி
- புதனின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் காலை 6 -மணி முதல் 9 மணி வரையான புதன் ஓரையில் ஹயக்கிரீவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டால் கற்றல் குறைபாடு நீங்கி ஞாபக சக்தி அதிகரிக்கும்.
புரட்டாசி-7 - (23-ந் தேதி , வியாழக்கிழமை)
நட்சத்திரம்: அஸ்வினி
- குரு, கேது ஆதிக்கம் பெற்ற இந்த நாளில் ஆஞ்ச நேயருக்கு வாழைப்பழ மாலை சாற்றி வழிபட்டால் கோபித்து கொண்டு வீட்டை விட்டுச் சென்றவர்கள், தலைமறைவாக வாழ்பவர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய தகவல் கிடைக்கும்.
புரட்டாசி-8- (24-ந் தேதி, வெள்ளிக்கிழமை)
நட்சத்திரம் : பரணி
- சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் வயதான சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள்,குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், ஜாக்கெட் பிட், இனிப்பு கொடுத்து ஆசி பெற திருமணத்தடை அகலும்.
புரட்டாசி-9- (25-ந் தேதி, சனிக்கிழமை)
நட்சத்திரம்: கிருத்திகை
- (காலை 11.34- மணிக்கு பிறகு) சனி மற்றும் சூரியனின் கதிர் வீச்சுகள் நிறைந்த நாள். அன்றைய தினம் மாலை 4 மணி முதல் -5 மணி வரையான சூரிய ஓரையில் ஒரு கிலோ கோதுமையை தானம் தர அரசியல் பதவியில் உள்ள இடர்கள் நீங்கும்.
புரட்டாசி-10- (26-ந் தேதி, ஞாயிற்றுக் கிழமை)
நட்சத்திரம்: ரோகிணி
- (மதியம் 2.33- மணிக்கு மேல்) சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிக்கதிர்கள் இயங்கும் நாள்.சித்த பிரம்மை மனக்குழப்பம், மன நோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிலும் தோல்வி, சுய முடிவு எடுக்க முடியாத நிலை இருப்பவர்கள் மாலை 4 -மணி முதல் 5 மணிக்குள் சந்திர ஒரையில் பச்சரிசியால் செய்த உணவை தானம் தர மாற்றம் உண்டு
புரட்டாசி-11- (27-ந் தேதி. திங்கட்கிழமை)
நட்சத்திரம்: ரோகிணி
- (மாலை 5.42 மணி வரை) சந்திரனின் பரிபூரண இயக்கம் நிறைந்த இன்றைய நாளில் காலை 6-மணி முதல் 7 மணி வரையான சந்திர ஒரையில் பச்சரிசி மாவில் விளக்கு செய்து 2 நெய் தீபம் ஏற்றி சிவ பெருமானை வழிபட்டால் விரும்பிய ஊருக்கு உத்தியோக மாற்றம் கிடைக்கும்.
புரட்டாசி-12- (28-ந்தேதி, செவ்வாய்க்கிழமை)
நட்சத்திரம்: மிருகசீரிடம்
- செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் மதியம் 3 -மணி முதல் 4.30 மணி வரையான ராகு வேளையில் எலுமிச்சை சாதம் செய்து 7 பேருக்கு தானம் செய்வதுடன் துர்க்கை, காளியை வழிபட்டால் திருமணத் தடை, கணவன் மனைவி கருத்து வேறுபாடு அகலும். அதே நாளில் மகா வியதீ பாதம் இருப்பதால் புனித நீர் நிலைகளில் நீராடி நீத்தார்களை வழிபட்டால் முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும்.
புரட்டாசி-13- (29-ந் தேதி. புதன்கிழமை)
நட்சத்திரம்: திருவாதிரை
- புதன் மற்றும் ராகுவின் ஆதிக்கம் எதிரொலிக் கும் இந்த நாளில் பகல் 12- மணி முதல் 1.30 மணி வரையான ராகு வேளையில் சரபேஸ்வரரை வழிபட்டால் பட்டா, சிட்டா அடங்கல் இல்லாத சொத்துப்பிரச்சினை, உயிலால், முறையான பத்திரங் கள் இல்லாததால் நிலவும் சொத்துப்பிரச்சினைகள் தீரும்.
புரட்டாசி-14 (-30-ந் தேதி, வியாழக்கிழமை)
நட்சத்திரம்: புனர்பூசம்
- குருவின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் மதியம் 1- மணி முதல் 2 மணி வரையான குரு ஓரையில் ராமர் பட்டாபிசேக படத்தின் முன் அமர்ந்து ஸ்ரீராம ஜெயம் எழுதினால் பிரிந்த கணவன் மனைவி, இழந்த சொந்தங்கள் மீண்டும் இணைந்து வாழ்வார்கள்.இழந்த பொன், பொருள் மீண்டும் கிடைக்கும்.
புரட்டாசி-15 -(1--10-2021, வெள்ளிக்கிழமை)
நட்சத்திரம்: பூசம்
- சனி,சுக்கிரனின் ஆசிகள் நிறைந்த இந்த நாளில் 8 உடல் ஊனமுற்றோருக்கு கருப்பு கம்பளி தானம் தந்தால் செய்யும் தொழிலில் ஸ்திர தன்மை உண்டாகும். நல்ல லாபம் கிடைக்கும். உத்தி யோகத் தில் உயர் அதிகாரிகளால் இருக்கும் சங்கடங்கள் நீங்கும்.
புரட்டாசி-16 -(2--ந் தேதி, சனிக்கிழமை)
நட்சத்திரம் : ஆயில்யம்
- புதன் மற்றும் சனியின் ஈர்ப்பு அதிகம் உள்ள இந்த நாளில் மாலை 6 - மணி முதல் 7 மணி வரை யான புதன் ஓரையில் சக்கரத்தாழ்வாருக்கு 5 நெய்தீபம் ஏற்றி துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் ஜாமின் தொடர்பான பிரச்சினை அகலும். தத்துக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
புரட்டாசி-17 -(3-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் : மகம்
- சூரியன் மற்றும் கேதுவின் ஆதிக்கம் இணைந்த இந்த நாளில் பகல் 12 மணி முதல்-1.30 மணி வரையான எம கண்ட நேரத்தில் ஓம் நமச்சிவாய என்ற மந்திரத்தை 108 முறைச் சொல்வதுடன் சாலை யோரத்தில் வாழும் ஆதரவற்றவர்கள் 7 பேருக்கு முழுச் சாப் பாடு தண்ணீருடன் தானம் தந்தால் அரச பதவி நிலைக்கும்.அரசாங்க உத்தியோகத்தில் உள்ள இடர் தீரும்.
புரட்டாசி-18 -(4-ந் தேதி, திங்கட்கிழமை
நட்சத்திரம்: பூரம்
- சந்திரன் மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் இணைந்த அதே நாளில் பிரதோஷமும் இருப்ப தால் மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் மாது ளைச் சாறால் சிவனுக்கு அபிசேகம் செய்தால் கருப்பை, மாதவிடாய் தொடர்பான அனைத்து பிரச் சினைகளும் தீரும்.
புரட்டாசி-19- (5-ந் தேதி, செவ்வாய்க் கிழமை)
நட்சத்திரம்: உத்திரம்
- செவ்வாய் மற்றும் சூரியனின் சக்தி சேர்ந்த இந்த நாளில் காலை 7 மணி முதல் -8 மணி வரை யான சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்து சூரிய நமஸ் காரம் பண்ண அரசாங்க உத்தியோகம் கிடைக்கும். அரசு உதவி கிடைக்கும்.
புரட்டாசி-20 -(6-ந் தேதி, புதன்கிழமை)
நட்சத்திரம்: ஹஸ்தம்
- புதன் மற்றும் சந்திரனின் சக்திகள் வெளிப் படும் இந்த நாளில் சிறு குழந்தைகளுக்கு கல்வி, உணவு சம்பந்தமான உதவி செய்ய தீராத தோல்வியாதி, வலிப்பு நோய் தீரும். அன்றைய தினம் மகாளய அமாவாசை என்பதால் முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுத்து உணவுப்படையலிட்டு வழிபட வேண்டும். இயன்ற அளவு உணவு தானம் வழங்குவது மேலும் சிறப்பு.
புரட்டாசி-21- (7-ந் தேதி, வியாழக்கிழமை)
நட்சத்திரம் : சித்திரை
- குரு மற்றும் செவ்வாயின் அதிர்வு கள் மிகுந்த இந்த நாளில் காலை 7 மணி முதல் -8 மணி வரையான செவ்வாய் ஓரையில் சித்தர்கள் ஜீவ சமாதிக்கு 108 செங்கல் தானம் வழங்கினால் நிதிப் பற்றாக்குறையால் தடைபட்ட வீடுகட்டும் பணி துரிதப் படுத்தப்படும்.
புரட்டாசி-22- (8-ந் தேதி, வெள்ளிக் கிழமை)
நட்சத்திரம் : சுவாதி
- சுக்கிரன்,ராகுவின் ஆதிக்கம் நிறைந்த இந்த நாளில் விதவை பெண்களுக்கு அசைவ பிரியாணி தானம் வழங்கினால் தவறான நட்பில் இருப்பவர்கள் திருந்தி குடும்பத்துடன் இணைவார்கள்.
புரட்டாசி- 23- (9-ந் தேதி, சனிக்கிழமை)
நட்சத்திரம்: விசாகம்
- குரு,சனி ஆதிக்கம் பெற்ற இந்த நாளில் பிரம்மஹத்தி தோஷம் இருப்பவர்கள் காலை 7 மணி முதல் -8 மணி வரையான குரு ஒரையில் கோ பூஜை நடத்தினால் தோஷம் குறையும். இயலாதவர்கள் பசுவிற்கு அகத்திக்கீரை தந்தால் போதும்.
புரட்டாசி-24- (10-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம்: அனுஷம்
- சூரியன், சனியின் ஆதிக்கம் கலந்த இந்த நாளில் சிவனுக்கு காலை 6- மணி முதல் 7 மணி வரையான சூரிய ஓரையில் வில்வ மாலை அணிவித்து வழிபட்டால் கருத்து வேறுபாட்டால் பிரிந்த தந்தை- மகன் மீண்டும் இணைவார்கள்.குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு புத்திரபிராப்தி கிட்டும்.
புரட்டாசி-25- (11-ந் தேதி, திங்கட்கிழமை)
நட்சத்திரம்: கேட்டை
- (பகல் 12.56 மணி வரை)சந்திரன் மற்றும் புதனின் ஆதிக்கம் பெற்ற இந்த நாளில் மகாவிஷ்ணுவை வழிபட்டால் நிலுவையில் உள்ள வரா கடன்கள் வசூலாகும்.
புரட்டாசி-26- (12-ந் தேதி,செவ்வாய்க்கிழமை)
நட்சத்திரம்: பூராடம்
- (காலை 11.26 மணிக்கு பிறகு)செவ்வாய் மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் உள்ள இந்த நாளில் இடுப்பில் சர்ப்பம் தரித்த விநாயகருக்கு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் பிரிந்த தம்பதிகள் இணைவார்கள்.
புரட்டாசி-27- (13-ந் தேதி, புதன்கிழமை)
நட்சத்திரம்: உத்திராடம்
- (காலை 10.19 மணிக்கு பிறகு)புதன் மற்றும் சூரியன் இணைந்து புதன் ஆதித்ய யோகம் பெற்ற இந்த நாளில் நவ கிரகத்தில் உள்ள சூரியன் மற்றும் புதன் பகவானை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
புரட்டாசி-28- (14-ந் தேதி, வியாழக்கிழமை)
நட்சத்திரம்: திருவோணம்
- (காலை 9.36 மணிக்கு மேல்) சரஸ்வதி பூஜை அன்று சகல கலைகளுக்கும் அதிபதியான சரஸ்வதி தேவியை மாணவ மணிகள் வழிபட்டால் ஞான விருத்தி உண்டாகும்.
புரட்டாசி-29- (15-ந்தேதி, வெள்ளிக்கிழமை)
நட்சத்திரம்: அவிட்டம்
- (காலை 9.17 மணிக்கு மேல்) விஜய தசமி அனைத்து வித வெற்றியை தந்தருளும் நாளான விஜயதசமி அன்று தடைபட்ட சுப விஷயங்களைத் தொடங்கினால் எளிதில் வெற்றி பெற முடியும். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்
புரட்டாசி-30- (16-ந் தேதி சனிக்கிழமை)
நட்சத்திரம்: சதயம்
- (காலை 9.23 மணிக்கு மேல்) சனி மற்றும் ராகுவின் ஆதிக்கம் பெற்ற இந்த நாளில் 9 -மணி முதல் 10.30 மணி வரையான ராகு வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபட்டால் வெளிநாட்டு வேலை கிடைக்கும்.
புரட்டாசி-31 - (17-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம்: பூரட்டாதி
- (காலை 9.53 மணிக்கு மேல்) சூரியன் மற்றும் குருவின் ஆதிக்கம் இணைந்த இந்த நாளில் அல்லது சிவன் கோவில்கள், சித்தர்கள் சமாதிகளில் உலவாரப்பணிகள் செய் தால் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும். அடமான நகைகள் மீண்டு வரும்.