இலங்கை துறைமுகத்தில் இந்தியாவின் இரு கப்பல்கள் - கூட்டு பயிற்சிக்கு தயாராகும் படையினர்!

#India #Ship #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
இலங்கை துறைமுகத்தில் இந்தியாவின் இரு கப்பல்கள் - கூட்டு பயிற்சிக்கு தயாராகும் படையினர்!

இந்தியக் கடலோர காவல்படைக்குச் சொந்தமான ‘வராகா’  மற்றும் ‘அதுல்யா  ஆகிய இரு கப்பல்கள் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

 இலங்கைக் கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கு அமைய இந்தக் கப்பல்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 

 96.2 மீட்டர் நீளம் கொண்ட ‘வராகா’ கப்பலுக்குத் தளபதி அஸ்வினி குமாரும், 50 மீட்டர் நீளம் கொண்ட ‘அதுல்யா’ கப்பலுக்குத் தளபதி அனித் குமார் மிஸ்ராவும் தலைமை தாங்குகின்றனர்.

 இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடலோர காவல்படையினருடன் இணைந்து இந்தியக் கப்பல்கள் விசேட கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.

 இரு நாடுகளின் கடலோர காவல்படைகளுக்கும் இடையிலான தொழில்முறைத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும், பிராந்திய கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்த விஜயம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!