வைத்தியசாலை கைக்குண்டு சம்பவம்: மற்றொரு சந்தேக நபர் கைது

#Arrest #Police
Prathees
4 years ago
வைத்தியசாலை கைக்குண்டு சம்பவம்:  மற்றொரு சந்தேக நபர்  கைது

நாரஹேன்பிட்டி தனியார் மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள கழிவறையில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக மற்றொரு சந்தேக நபர் நேற்று  கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னர்  கைது செய்யப்பட்டு  தடுத்துவைக்கப்பட்டுள்ள முக்கிய சந்தேக நபர் வெளிப்படுத்திய தகவலின் படி 22 வயது இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக நபர் திருகோணமலை பகுதியில் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் முக்கிய சந்தேக நபருக்கு வெடிகுண்டை தயார் செய்ய குறித்த இளைஞன்  உதவியதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4