இலங்கையில் முதலாம் திகதிக்கு பின்னரும் தொடரும் ஊரடங்கு? – வெளியான புதிய தகவல்

#SriLanka #Lockdown
Yuga
3 years ago
இலங்கையில் முதலாம் திகதிக்கு பின்னரும் தொடரும் ஊரடங்கு? – வெளியான புதிய தகவல்

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தற்போது காணப்படுகின்ற தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற போதிலும், இரவு வேளைகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுலில் வைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டத்தை அமுலில் வைத்திருக்க பெரும்பாலும் சந்தர்ப்பம் காணப்படுவதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், எதிர்வரும் முதலாம் திகதி முதல் புதிய சுகாதார வழிகாட்டியொன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் கூட்டமாக ஒன்று கூடுவதை முழுமையாக தவிர்க்கும் வகையிலான சுகாதார வழிகாட்டியொன்றே வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

எனினும் இது தொடர்பான தீர்மானம் இம்மாதம் 30 ஆம் திகதி எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நேற்று(25) நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!