இலங்கையில் அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும்?

#SriLanka #rice #prices
Yuga
3 years ago
இலங்கையில் அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும்?

அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை மாற்றாவிட்டால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு தீவிரமடையும் என அரிசி வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசியை விற்பனை செய்யும் அரிசி விற்பனையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் 100,000 ரூபாவாக உயர்த்தப்பட்டதால், அரிசியை விற்பதில் இருந்து சில வியாபாரிகள் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரிசி சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் நுகர்வோர் விவகார அதிகார சபை அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து கடந்த 2 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒரு கிலோ நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 98 ரூபாயாகவும், ஒரு கிலோ சம்பா அரிசி 103 ரூபாவாகவும் மற்றும் ஒரு கிலோ கீரி சம்பா 125 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அவசர கால அதிகாரங்களின் கீழ் முன்னணி அரிசி ஆலைகளில் நுகர்வோர் விவகார அதிகார சபையால் கடந்த 22 ஆம் திகதி சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு நுகர்வோர் விவகார சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.

புதிய சட்டத்தின்படி, நுகர்வோர் விவகார சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கான குறைந்தபட்ச அபராதம் 1,000 ரூபாயிலிருந்து 100,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!