இலங்கையில் கொரோனா மரணங்கள் குறைவடைவதற்கான காரணம் வெளியானது!

#SriLanka #Covid 19
Yuga
3 years ago
இலங்கையில் கொரோனா மரணங்கள் குறைவடைவதற்கான காரணம் வெளியானது!

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுவதால் நாட்டின் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வாரங்களில் இந்த மரண வீதம் மேலும் குறைவடையும் என அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் உள்ளவர்களில் 64 சதவீதமானோர் ஒரு தடுப்பூசியையாவது செலுத்திக் கொண்டுள்ளனர். 52 சதவீதமானோர் இரண்டு டோஸ்களையும் ஏற்றிக் கொண்டுள்ளனர்.

20 தொடக்கம் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களில் 13 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரண்டு கொவிட் தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, உடனடியாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ நாட்டில் உள்ள இளைஞர், யுவதிகளை கேட்டுள்ளார்.

30 வயதிற்கும், 20 வயதிற்கும் இடைப்பட்டவர்களில் 41 சதவீதமானோருக்கு முதலாவது தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!