இலங்கையில் கொரோனாவிற்கு பின்னரான அபாய நிலை குறித்து எச்சரிக்கை

#Covid 19
Yuga
3 years ago
இலங்கையில்  கொரோனாவிற்கு பின்னரான அபாய நிலை குறித்து எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதன் பின்னர், சில குழந்தைகளின் உடல் உறுப்புக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான நோய்கள் தற்போது படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுக்கின்றது.

கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவின் பொறுப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் நலின் கித்துல்வத்த இதனைத் தெரிவித்துள்ளார்.

ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு, நேற்று முன்தினம் மாத்திரம் இந்த நோய் தாக்கத்திற்கு உள்ளான 5 சிறார்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, கொவிட் தொற்றினால் பாதிக்கப்படும் சிறார்களுக்கு மாத்திரமன்றி, அனைத்து தரப்பிற்கும் இந்த நோய் தாக்கம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கொவிட் தொற்றுக்குள்ளான கர்ப்பிணித்தாய்மாருக்கு பிறக்கின்ற சில சிசுக்களுக்கும், அந்த வைரஸின் தாக்கம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக டொக்டர் நலின் கித்துல்வத்த தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!