கோடீஸ்வர பொறியியலாளரின் கொலை:  வெளிவந்த பல இரகசியங்கள் 

Prathees
3 years ago
கோடீஸ்வர பொறியியலாளரின் கொலை:  வெளிவந்த பல இரகசியங்கள் 

சொத்துக்களை மாற்றுவதற்கு குழந்தைகள் இல்லாததால் தத்தெடுத்த பிள்ளைக்கு சொத்தை எழுதத் தயாராகும் போது பொறியியலாளரைக் கொலை செய்ததாக சந்தேக நபர்கள் ர் சிஐடியிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் வீரபத்தரலாகே  சமன் விஜேசிரி என்ற 63 வயதான  சிலாபத்தில் உள்ள காகப்பள்ளிய இடத்தைச் சேர்ந்தவர்.

உயிரிழந்தவர் சுமார் இருபத்தைந்து வருடங்கள் ஐக்கிய நாடுகளின் பட்டய பொறியாளராகவும் உலக வங்கியின் இலங்கை கிளையில் தொழில்நுட்ப பொறியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

50 கோடிக்கும் அதிகமான சொத்துக்களைப் பெற குறித்த பொறியியலாளர் கொலை செய்யப்ப்ட்டுள்ளதாக சிஐடியினர் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் வெளிவந்துள்ளது. 

சமன் விஜேசிறி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 2018 இல் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக முதலாவது முறைப்பாடு சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. 

பின்னர், சமன் விஜேசிரியின் உறவினர் விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதன்படிஇ விசாரணை 2020 இல் சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிஐடியினர் மேற்கொண்ட விசாரணையில் பொறியாளர் கொலை செய்யப்பட்டது முதல் முறையாக தெரியவந்தது

 நீண்ட விசாரணைக்குப் பிறகு மூன்று பேரை சிஐடி கைது செய்துள்ளது. பொறியாளரின் கொலை செய்து சடலத்தை  குளத்தில் ஒளித்து வைத்துள்ளதாக கடந்த வாரம் சந்தேக நபர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் பெராஜ் லிங்கன் என்ற தொழிலதிபர்  இத்தாலியிலிருந்து வந்து இலங்கையில் வியாபாரம் செய்கிறார்.இரண்டாவது சந்தேகநபர் ருவன் சந்தனவும் ஒரு தொழிலதிபர்.

மூன்றாவது சந்தேகநபர் நிஹால் தேவபிரிய, இறந்தவரின் உறவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் அக்டோபர் 12. 2018 அன்று பொறியாளர் சமன் விஜேசிரியை கடத்தி கொன்று சிலாபம் குளத்தில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. சமன் விஜேசிரி ஜப்பானிய பெண்ணை மணந்தார், பின்னர் விவாகரத்து பெற்றார்.

சமன் விஜேசிறியின் கொலைக்குப் பிறகு, சந்தேகநபர்கள்  வழக்கறிஞரின் உதவியுடன் போலி பத்திரங்களைத் தயாரித்து முக்கிய சந்தேக நபரின் பெயரில் சொத்துக்களைப் பதிவு செய்தமை தெரியவந்தது.

கொi சய்யப்பட்டவர் வெளிநாடு சென்றதாக  குறிப்படுவதற்கு  மே 28. 2019 அன்று பி.கே 225 விமானத்தில் வெளிநாடு சென்றதாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தரவுத்தளத்தில் தகவல் உள்ளிடப்பட்டமையும் தெரியவந்தது.

ஒரு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிக்கு ரூ .150,000 கொடுத்து இத்தகைய தரவு உள்ளிடப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக குடிவரவு அலுவலர், வழக்கறிஞர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டு,  குளத்தில் வீசப்பட்டதாக கூறப்படும் பொறியியலாளரின் உடல் பாகங்களைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!