சுவையான ஆரோக்கியமான காளான் வடை

Prabha Praneetha
3 years ago
சுவையான ஆரோக்கியமான காளான் வடை

காளானில் மிக அதிகமான புரதச்சத்து உள்ளதால் இது குழந்தைகளுக்கு உகந்த உணவு. சுவையிலும் இந்த வடை வித்தியாசமாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பட்டன் காளான் - 250 கிராம்

சோம்பு - 1 டீஸ்பூன்

தேங்காய் துருவியது - 5 ஸ்பூன்

பொட்டுக்கடலை மாவு - 100 கிராம்

கடலை மாவு - 50 கிராம்

பிரட் - 2 ஸ்லைஸ் (பிரட்டை உதிர்த்துக் கொள்ளவும்)

கொத்தமல்லி - சிறிதளவு

மிளகாய் தூள் - சுவைக்கேற்ப

உப்பு - சுவைக்கேற்ப

எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

காளானை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய காளானை போட்டு அதனுடன் சோம்பு, தேங்காய் துருவல், பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, கொத்தமல்லி மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

தேவைப்பட்டால் கடலை மாவு சேர்த்து கொள்ளவும்.

கடைசியாக பிரட் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

சூப்பரான காளான் வடை ரெடி.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!