நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டிருந்த இலங்கைக் குடும்பத்திற்கு கனடாவில் புகலிடம்

#SriLanka #Canada
Yuga
4 years ago
நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டிருந்த இலங்கைக் குடும்பத்திற்கு கனடாவில் புகலிடம்

அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்திய எட்வேர்ட் ஸ்னோவ்டனிற்கு ஹொங்கொங்கில் தங்கள் குடியிருப்பில் அடைக்கலம் வழங்கி சிக்கலில் சிக்கிய இலங்கைக் குடும்பத்திற்கு கனடா புகலிடம் அளித்துள்ளது.

அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்திய பின்னர் ஸ்னோவ்டன் தலைமறைவாகயிருந்த வேளை அவருக்கு இலங்கைக் குடும்பம் அடைக்கலம் வழங்கியிருந்தது.

இதையடுத்து, அவர்கள் ஹொங்கொங்கில் தங்கள் ஆரம்பகட்ட அடைக்கல கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த சுபுன் திலின கெலெபத்த டில்றுக்சி நொரிஸ் தம்பதியினருக்கும் அவர்களது இரண்டு பிள்ளைகளிற்கும் கனடா அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4