ரதல்ல வீதியில் மூன்று வாகனங்கள் கோர விபத்து – 6 பேர் படுகாயம்! photos

#SriLanka #Accident
Yuga
4 years ago
ரதல்ல வீதியில் மூன்று வாகனங்கள் கோர விபத்து – 6 பேர் படுகாயம்! photos

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் 30.09.2021 இன்று காலை ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த மண்மேட்டுடன் மோதி வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி குடைசாய்ந்துள்ளது.

குறித்த முச்சக்கரவண்டி தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

இவ்விபத்தில் குடைசாய்ந்த வேனில் பயணித்த நால்வரும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாரே இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4