சிறைக் கைதிகள் இருவர் தப்பியோட்டம்: பொலிஸார் வலைவீச்சு

#Prison #Police
Prathees
4 years ago
சிறைக் கைதிகள் இருவர் தப்பியோட்டம்: பொலிஸார் வலைவீச்சு

எம்பிலிப்பிட்டிய- கந்துருகஸார  சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் இருவர் நேற்று  (29) அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக  எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சத்துரங்க சம்பத் என்ற 28வயது இளைஞரும் ஆறுமுகம் ராஜேஸ் கருணானந்தன் என்ற 36 வயது நபருமே இவ்வாறு சிறையில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

சத்துரங்க சம்பத், திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில்இ மாத்தறை நீதிமன்றில் சிறைத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்.

 ராஜேஸ் கருணானந்தன் 30 மில்லிகிராம் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு நீதிமன்றில் விதிக்கப்பட்ட 6000 ரூபாய் அபராதப் பணத்தை செலுத்த முடியாமல் சிறைத் தண்டனை  விதிக்கப்படடவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 இவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4