எடை இழப்பிற்கு உதவும் கறிவேப்பிலை நீர்..

Prabha Praneetha
3 years ago
எடை இழப்பிற்கு உதவும் கறிவேப்பிலை நீர்..

கறிவேப்பிலை இந்தியாவில் உள்ள மசாலா பொருட்களில் முக்கியமானதாக உள்ளது. இது கூந்தலில் துவங்கி உடலின் பல்வேறு பாகங்களுக்கும் நன்மை அளிக்கக்கூடியது.

ஆனால் பலர் இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து அறியாமல் இருக்கின்றனர். எனவே கறிவேப்பில்லை நமது உடலுக்கும் எடை இழப்பிற்கும் எவ்வாறு உதவுகிறது என இப்போது பார்க்கலாம்.

கறிவேப்பிலை ஒரு பாரம்பரியமான உணவாகும். பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு உணவாக கறிவேப்பிலை உள்ளது.

பல்வேறுப்பட்ட உணவுகளில் நறுமணத்திற்காக கறிவேப்பிலையை பொரித்து போடுவதுண்டு.

ஒரு சாம்பார் அல்லது ரசம் போன்ற குழம்புகளை நீங்கள் சமைக்கிறீர்கள் எனில் அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை போடவில்லை எனில் உங்கள் சமையல் முழுமையடையாது.

நறுமணத்திற்காக மட்டுமே கறிவேப்பிலை சேர்க்கப்படுவதாக நினைக்கின்றனர். இன்னும் சிலர் கறிவேப்பிலை முடிக்கு மட்டும் நன்மை பயக்கக்கூடியது என நினைக்கின்றனர்.

அதனால் அவர்கள் கறிவேப்பிலையை அவர்களது உணவில் இருந்தால் ஒதுக்கி வைக்கின்றனர். ஆனால் கறிவேப்பிலை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிகமாக கொண்டுள்ளது.

சீன மருத்துவ இதழில் கறிவேப்பிலை பற்றி மேற்கொண்ட ஆய்வானது வெளியானது. அதன்படி, கறிவேப்பிலை நமது உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

இதன் மூலமாக நமது இதயம் ஆரோக்கியமாக இருக்க கறிவேப்பிலை உதவுகிறது. இது பல்வேறு ஆயுர்வேத வைத்தியங்களுக்கு உதவியுள்ளது.

கறிவேப்பிலை செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகிறது, கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது என்கிற சொல்லை ஊர்ப்புறங்களில் கேட்க முடியும்.

அது உண்மைதான், கறிவேப்பிலை பார்வையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இரத்த சோகையை தடுக்கவும் இது உதவுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!