வடமராட்சி கிழக்கில் 372 கிலோ மஞ்சளுடன் இருவர் சிக்கினர்!

#Jaffna
Prathees
4 years ago
வடமராட்சி கிழக்கில் 372 கிலோ மஞ்சளுடன் இருவர் சிக்கினர்!

யாழ்., வடமராட்சி கிழக்கு பகுதியில் 372 கிலோகிராம் மஞ்சளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தாளையடிப் பகுதியில், கடல் மார்க்கமாகக் கடத்தி வரப்பட்ட மஞ்சளை இருவர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தபோது, மருதங்கேணிப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதன்போது மஞ்சளை ஏற்றிக்கொண்டு இருந்த இருவரையும் கைதுசெய்தனர்.

இந்த நடவடிக்கையின்போது 372 கிலோகிராம் மஞ்சளும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4