படிக்காததால் தந்தையிடம்  துடைப்பத்தால் அடிவாங்கிய மாணவன் மரணம்

#Arrest #Court Order
Prathees
4 years ago
படிக்காததால் தந்தையிடம்  துடைப்பத்தால்  அடிவாங்கிய மாணவன் மரணம்

தனது 16 வயது மகனை துடைப்பத்தால் அடித்து கொன்ற குற்றச்சாட்டின் பேரில் தந்தை ஒருவர்கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலி மேல் நீதிமன்ற நீதவான் ஹர்ஷன கேகுணவெல நேற்று (30) சந்தேக நபரை ஒக்டோபர் 13 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

தனது மகன் படிக்காததால் தந்தை துடைப்பத்தால்  அடித்துள்ளார். பலத்த காயமடைந்த மகன் காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில்   நேற்று (30) காலை உயிரிழந்ததாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வவாறு உயிரிழந்தவர் காலி மகமோதர சியம்பலகஹவத்தவில்  வசிக்கும்  11 ஆம் வகுப்பில் கற்கும் மாணவன் ஆகும்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று மன்தினம் (29) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் மாணவர்  தனது தாயிடம் தனக்கு தலைவலி இருப்பதாக கூறியுள்ளர்.

மாணவன் கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று  காலை உயிரிழந்துள்ளர்.

அதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு  நீதிமன்றத்தில்  ஆஜர்டுத்தப்பட்டார்.

காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4