வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களால் ஆபத்து!

#SriLanka #Tourist
Yuga
3 years ago
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களால் ஆபத்து!

முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட வெளிநாட்டு பயணிகளை, பீ.சி.ஆர் சோதனை இல்லாமல், நாட்டிற்குள் அனுமதிக்கும் நடவடிக்கையை தேசிய தொழிற்சங்க முன்னணி கண்டித்துள்ளது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்கள், கோவிட் தொற்றை பரப்பக்கூடும் என்ற வகையில், இந்த செயற்பாடு மற்றொரு அலையை அழைப்பது போன்றது என்று சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

முழு தடுப்பூசி போடப்பட்ட மக்கள் மூலம் வைரஸ் பரவுவதில்லை என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லாதபோது, சுகாதார சேவை இயக்குநர், அத்தகைய நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அல்ஃபா மற்றும் டெல்டா போன்ற அனைத்து கோவிட் வகைகளும் வெளிநாட்டுப் பயணிகள் மூலம் நாட்டிற்குள் நுழைந்ததாகவும், எனவே தற்போதைய இந்த நடவடிக்கை மற்றொரு அலையை அழைக்கும் முயற்சி என்றும் ரத்னப்ரிய கூறியுள்ளார்.

இந்தியா, ரஷ்யா, உக்ரைன், இங்கிலாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலங்கைக்கு வருகை தரலாம். அவர்கள் முன்னர் போலவே வைரஸையும் புதிய வகைகளையும் கொண்டு வரலாம்.

இந்த நடவடிக்கை இலங்கையர்களின் உயிருக்கு முழு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, செப்டம்பர் 11 மற்றும் 17 க்கு இடையில் ஒரு வாரத்திற்குள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 183 கொவிட் நோயாளிகள் இறந்துவிட்டதாக ரத்னப்ரியா கூறியுள்ளார்.

அதாவது, முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களில் 20 வீதமானோர் வைரஸால் இறந்துள்ளதாக ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!