யோஹானி குறித்து வெளியான போலி செய்தி : உண்மை என்ன?

#SriLanka
Yuga
3 years ago
யோஹானி குறித்து வெளியான போலி செய்தி : உண்மை என்ன?

சர்வதேச இசை அரங்கில் தற்போது அதிகம் பேசப்படும் இலங்கை பாடகியான யோஹானி டி சில்வாவின் இந்திய சுற்றுப் பயணம் தொடர்பில் பத்திரிகைகளில் வெளியான செய்தி போலியானது என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சியொன்றிற்காக புதுடில்லி பயணித்துள்ள யோஹானியை வரவேற்பதற்காக, பல லட்சக் கணக்கான மக்கள் ஒன்று திரண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்ட புகைப்படமொன்றும் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தன.

எனினும், யோஹானியை வரவேற்பதற்காக பெருந்திரளானோர் வருகைத் தரவில்லை என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானில் 2019ம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியின் போது, அங்குள்ள விமான நிலையமொன்றில் மக்கள் ஒன்று கூடியிருந்த புகைப்படமொன்றே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த புகைப்படத்திலுள்ள மக்கள் கூட்டம், இந்தியாவில் யோஹானியை வரவேற்பதற்காக ஒன்று கூடிய கூட்டம் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!