திருமலையில் கடத்தப்பட்ட முன்னாள் போராளிக்கு நடந்தது என்ன?

#Trincomalee
Yuga
3 years ago
திருமலையில் கடத்தப்பட்ட முன்னாள் போராளிக்கு நடந்தது என்ன?

திருகோணமலை- வரோதயன் நகரைச் சேர்ந்த 39 வயதுடைய மனோகரதாஸ் சுபாஷ் என்பவரை, கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி உப்புவெளி காவல்துறையினர் எனக் கூறி ஆயுதம் ஏந்திய மர்மக் குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் கண்காணிப்பு குழு இலங்கையில் தங்கியிருந்த நிலையில், இச் சம்பவம் இடம்பெறுள்ளது.

இந்த நிலையில், திருகோணமலையில் கடத்தல் சம்பவம் நிகழ்ந்ததாக தங்களுக்கு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என உப்புவெளி பொலிசார் தெரிவித்திருந்தனர்.

எனினும் தற்போது, திருகோணமலையைச் சேர்ந்த குறித்த நபர் கொழும்பு குற்றப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் தெரியவருவது,

இராணுவ மறுவாழ்வின் கீழ் இரண்டு வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட மனோகரதாஸ் சுபாஷ், கடந்த 28ம் திகதி அன்று காலை 6 மணியளவில் பொலிசார் எனக்கூறி அவரது வீட்டிற்கு வந்த ஒரு குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் கண்காணிப்பு குழு இலங்கையில் தங்கியிருந்த நிலையில், இந்த கடத்தல் சம்பவம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என உப்புவெளி பொலிசார் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் இது குறித்து வினவியபோது,இச் சம்பவம் தொடர்பாக குறித்த நேரத்தில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது, திருகோணமலையை சேர்ந்த திருமணமான ஒருவர், குற்றப் புலனாய்வு பிரிவினரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதன்படி, உப்புவெளி பொலிசார் எனக்கூறி ஆயுதம் ஏந்திய பிரிவினரின் மூலமாக கடத்திச் செல்லப்பட்ட திருகோணமலை வரோதயன் நகரைச் சேர்ந்த மனோகரதாஸ் சுபாஷ் கைது செய்யப்பட்டு கொழும்பு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுபாஷ் கடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே அவரது மனைவியும் தாயும் திருகோணமலை மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தமையினை இலங்கை ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (JDS ) வெளியிட்ட ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எந்த அதிகாரப்பூர்வ அனுமதியும் இல்லாமல் ஆயுதம் ஏந்திய குழுவால், மனோகர்தாஸ் சுபாஷை விசாரிக்கப்பட்டு திருப்பி அனுப்புவதாகக் கூறி வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக ஊடகங்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்

இதற்கு பதிலளித்த பொலிஸ் அதிகாரி, அது எங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் அவரை கடத்தவில்லை. சுபாஷை கைது செய்ய கொழும்பு குற்றப் பிரிவு உத்தரவு பிறப்பித்தது. நாரஹேன்பிட்டி மருத்துவமனையில் கைக்குண்டு விசாரணை தொடர்பாக அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து அழைத்து வந்ததாக தெரிவித்தார்.

இச் சம்பவம் தொரப்பில் சுபாஷின் மனைவி கூறுகையில்,

உப்புவெளி பொலிஸார் என கூறி வந்த ஆயுதக் குழுவினரிடம், நாங்கள் அவரை போக விடாமல் தடுத்த போது அவர்கள் ​​துப்பாக்கிகளை காட்டி மிரட்டி அவரை அழைத்துச் சென்றனர்.

நாங்கள் காரணத்தைக் கேட்கவும் அவர் மீது சந்தேகத்தின் பேரில் விசாரணை இருப்பதாகவும்அது முடிந்ததும் அனுப்புவதாகவும் அவர்கள் தெரிவித்ததாகவும் சுபாஷின் மனைவி ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!