இன்றைய வேத வசனம் 3.10.2021

#Bible #Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 3.10.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

எப்படி நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்க வேண்டும் என்பதை அப்போஸ்தலர் பவுல் தெளிவாக கூறுகிறார்
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (கொலோசெயர் 3:13)

அதாவது கிறிஸ்து மன்னித்தது போல உள்ளத்தில் ஆழமாய் திட்டமாய் எழுதிக் கொள்ளுங்கள் நீங்கள் உண்மையை உணர்ந்து மனஸ்தாபப்பட்டு மன்னிப்பு கேட்கும்போது கிறிஸ்து அப்படியே மன்னித்து விடுகிறார்.

அவர் உங்கள் பாவங்களுக்குள் சென்று ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதில்லை எத்தனை கொடிய பாவமானாலும் அவர் வேதனையோடு சிந்திய இரத்தம் முழுமையாய் நம்மை கழிவி மன்னித்துவிடுகிறது.
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1யோவான் 1:7)

ஆம் அவர் மன்னிக்கும் போது மறந்துவிடுகிறார் கடலின் ஆழத்தில் போட்டுவிடுகிறார் கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரமாய் நம் பாவங்களை நம்மை விட்டு விலக்குகிறார்.

நீங்கள் மன்னிக்கிறேன் என்று சொல்கிறீர்கள். ஆனால் மறக்கிறீர்களா? ஏற்ற வேளையில் உங்கள் உள்ளத்திலிருந்து திடீரென்று கசப்பும் வெறுப்பும் வெடித்து கிளம்புகிறது.

வேண்டாம் நண்பர்களே முழுவதும் மன்னித்து முழுவதும் மறந்து ஒன்றும் அறியாதது போல புது வாழ்க்கையைத் புது நட்பை தொடங்குங்கள்.

எங்களுக்கு விரோதமாய் குற்றம் செய்தவர்களுக்கு நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும் என்று பூரண மனசாட்சியோடு நீங்கள் சொல்ல வேண்டாமா?

தேவ பிரசன்னத்தில் உங்களைத் தாழ்த்தி சகல கசப்புகளுக்கும் பிரிவினைகளுக்கும் சண்டைகளுக்கும் இன்றே ஒரு முடிவு கட்டுங்கள்.

கிறிஸ்துவுக்குள் புதிய மனிதனாக வாழ்ந்திடுங்கள்..

அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.மத்தேயு 5:24

ஆமென்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!