இலங்கையில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #Covid 19
Yuga
3 years ago
இலங்கையில்   தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் கொரோனாத் தடுப்பூசி பெற்றுக்கொண்டமைக்கான சுகாதார அட்டை பயன்பாட்டை சட்ட ரீதியாக அமுலாக்க காலதாமதம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பொது இடங்களுக்குள் நுழையும்போது இரண்டு கொரோனாத் தடுப்பூசிகளையும் பெறப்பட்டமையை உறுதிப்படுத்தும் அட்டையை சமர்ப்பிக்கும் நடவடிக்கை கட்டாயமாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த முடிவு மேலும் தாமதமாகலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு தடுப்பூசிகளும் பெறப்பட்டதாக குறிப்பிடும் அட்டை கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட இடங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.

எனினும், அவ்வாறான சட்டத்தை ஒரே நேரத்தில் செயற்படுத்த முடியாது என பிரதிச் சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இச் சட்டத்தை கட்டாயமாக்குவதற்கு முன்னர் மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!