அடுத்த வருடம் அரசாங்க  செலவீனங்களில் 3300 கோடி ரூபாய் குறைப்பு?

#Parliament #SriLanka
Prathees
3 years ago
அடுத்த வருடம் அரசாங்க  செலவீனங்களில் 3300 கோடி ரூபாய் குறைப்பு?

2022ம் அண்டுக்கான வரவு செலவுத் திட்ட சட்டமூலத்தின் அடிப்படையில் அரசாங்க செலவீனங்களில் இருந்து 3300 கோடி ரூபாய் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மற்றும் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளதுடன் தேசிய பாதுகாப்புக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்துக்கான ஜனாதிபதியின் செலவீனங்களுக்கான ஒதுக்கீடு 2.78 பில்லியன் என்றும் அதன்படி, அடுத்த வருடம் ஜனாதிபதியின் செலவீனம் 6.6 பில்லியன் ரூபாவால் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளைஇ பாதுகாப்பு அமைச்சு தனது செலவை 18 பில்லியனால் அதிகரித்துள்ளது. 

இந்த வருடத்துக்கான பாதுகாப்பு அமைச்சின் செலவீனம் 355 பில்லியன் ரூபாயாக உள்ளதுடன், அடுத்த ஆண்டு அந்த செலவீனம் 373 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கும்.

பாதுகாப்புக்கு அடுத்ததாக, பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிக தொகை ஒதுக்கப்படுகிறது. 

286.7 பில்லியன் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதில் 286 பில்லியன் மீண்டு வரும் செலவீனம் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!