காபூல் பள்ளிவாசலுக்கு அருகில் குண்டுவெடிப்பு: பொதுமக்கள் பலர் உயிரிழப்பு

#Afghanistan
Prathees
4 years ago
காபூல் பள்ளிவாசலுக்கு அருகில் குண்டுவெடிப்பு: பொதுமக்கள் பலர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஏராளமான பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர் என்று தலிபான் அமைப்பினர் உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன 

எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற உறுதியான தகவலும், குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

காபூலில் உள்ள இத்தாலிய மருத்துவமனையான எமர்ஜென்சி என்ஜிஓஇ குண்டுவெடிப்பில் காயமடைந்த நான்கு பேரைப் சிகிச்சைக்காக அனுமதித்ததாக  டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது. 

மசூதியைச் சுற்றியுள்ள பகுதி தலிபான்களால் முற்றுகையிடப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டதாக  சர்வதேச செய்திகள் தெரிவிக்ககின்றன. 

இந்த தாக்குதலுக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், அவர்களுக்கு எதிரான இஸ்லாமிய அரசு குழு போராளிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4