கொவிட் தொற்றியோருக்கு ஏற்படும் 9 விதமான நீண்டகால நோய்அறிகுறிகள்

#Covid 19
Prasu
4 years ago
கொவிட் தொற்றியோருக்கு ஏற்படும் 9 விதமான நீண்டகால நோய்அறிகுறிகள்

கொவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு மத்தியில்  3 மாதங்கள் (90 நாட்கள்) முதல் 6 மாதங்கள் (180 நாட்கள்) வரையான காலப் பகுதிக்குள் ஏற்படும் 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

சிரமமாக மூச்சு எடுத்தல், வயிற்று நோய் அறிகுறிகள், மன அழுத்தம், நெஞ்சு மற்றும் தொண்டை வலி, அறிவாற்றல் பிரச்சினைகள், சோர்வு, தலைவலி, தசை வலி மற்றும் ஏனைய வலிகள் என 9 விதமான நோய் அறிகுறிகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

இந்த நோய் அறிகுறிகளில் மனஅழுத்தமானது 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

  • சிரமமாக மூச்சு எடுத்தல் :- 8%
  • வயிற்று நோய் அறிகுறிகள் :- 8%
  • மன அழுத்தம் :- 15%
  • நெஞ்சு மற்றும் தொண்டை வலி :- 6%
  • அறிவாற்றல் பிரச்சினைகள் :- 4%
  • சோர்வு :- 6%
  • தலைவலி :- 5%
  • தசை வலி :- 1.5 %
  • ஏனைய வலிகள் :- 7%

இந்த நோய் அறிகுறிகளுக்கு உள்ளாவோரில் பெண்களே அதிகம் என அவர் கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4