பிள்ளைகளின் தலையை துண்டித்து கொலைசெய்த தந்தை - அதிர்ச்சியில் மக்கள்

#Murder #United_States
Prasu
4 years ago
பிள்ளைகளின் தலையை துண்டித்து கொலைசெய்த தந்தை - அதிர்ச்சியில் மக்கள்

சொந்த பிள்ளைகள் கொன்று தலையில்லா சடலங்களை காட்டி மற்ற பிள்ளைகளை மிரட்டிய தந்தையையும் தாயையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடகிழக்கில் மொஜாவே பாலைவனம் உள்ளது. இந்த பாலைவனத்தின் அருகே கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி மாரிஸ் டெய்லர் ஜூனியர்(12) மற்றும் மாலியாகா டெய்லர்(13) ஆகிய இரு சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மீட்க பட்ட சடலங்களுக்கு தந்தை மாரிஸ் டெய்லர் சீனியர்(34) ஆவர். மேலும் மாரிஸ் டெய்லர் சீனியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அதில் 2 பிள்ளைகளை தந்தையான மாரிஸ் டெய்லர் சீனியர் கத்தியால் குத்தி கொன்று சிறுவர்களின் தலையை தனியாக துண்டித்துள்ளார்.

இந்த கொடூர சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி நடந்துள்ளது. மேலும் பிள்ளைகளின் தலையில்லா சடலத்தை குடியிருப்பு பகுதிக்குள் பல நாட்கள் வைத்திருந்துள்ளார். அதோடு சடலங்களை காட்டி மற்ற பிள்ளைகளை பயமுறுத்தியுள்ளார். மேலும் அவரது பிள்ளைகளுக்கு உணவு வழங்காமல் துன்புறுத்தி வந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தந்தையான மாரிஸ் டெய்லர் சீனியர் மீது கொலை குற்றம் மற்றும் சிறார் துஷ்பிரயோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மாரிஸ் டெய்லரின் குடியிருப்பில் இருந்து டிசம்பர் 4 ஆம் தேதி சடலங்களை கண்டெடுத்த அன்றே அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கடந்த செவ்வாய்கிழமை பிள்ளைகளை கொல்ல கணவருக்கு உதவிய நட்டாலி ப்ரோத்வெல்(44) கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4