இரு ATM இயந்திரங்களை உடைத்து ரூ.76 லட்சத்திற்கு மேல் திருடிய நபர் கைது

#Anuradapura #Arrest #Police
Prathees
4 years ago
இரு ATM இயந்திரங்களை உடைத்து ரூ.76 லட்சத்திற்கு மேல் திருடிய நபர் கைது

இரண்டு இடங்களில்  பொருத்தப்பட்டிருந்த இரு  ATM இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்த ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த சந்தேக நபர் அனுராதபுரம் மற்றும் மின்னேரியா பகுதிகளில் உள்ள இந்த ATMகளை உடைத்துள்ளார்.

அனுராதபுரம் பொலிஸார் சந்தேக நபரை நேற்று (03) கைது செய்தனர்.

30 வயதான சந்தேக நபர் எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மின்னேரியா பகுதியில் உள்ள ஏடிஎம் -ஐ உடைத்து 76 லட்சத்து 24,000  ருபாய் பணத்தினை திருடியுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது, ​​சந்தேக நபரிடம் இருந்த 29 லட்சம் ருபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

திருடிய பணத்தின் மூலம் 2.4 மில்லியன் மதிப்புள்ள ஒரு லொறியும்  சுமார் 900,000 ருபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் உன்றும் சுமார் 200,000 ருபாய் பெறுமதியான தளபாடங்களும்  சந்தேக நபரால் வாங்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4