அனைவரையும் தனக்குள் அடக்கும் விதமாக காய்களை நகர்த்தும் விஜய் டீவியின் யுக்தி
தென்னிந்திய தொலைக்காட்சி அலைவரிசைகள் எத்தனைதான் தோன்றினாலும் விஜய் டீவியை விட வேறெந்த சனலும் வெல்லைவே முடியாது.
அந்தளவுக்கு திறம்பட நிகழ்ச்சிகளை தொகுப்பதும், அதனை வெளியிடுவதும் என திறம்பட செயற்படும் தொலைக்காட்சி சேவையை வழங்கிவருகின்றது.
இந்தியாவில் மட்டுமன்றி, உலகத்தில் உள்ள தமிழ் பேசும், தமிழ் புரிந்துகொள்ளக்கூடிய மக்கள்
அனைவரையும் மெல்ல மெல்ல தன்பால் ஈர்த்து வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஓர் யுக்தியைக் கையாண்டு மேலும் ரசிகர்களை கவரக்கூடியதாக செயற்படத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டுகளில் நடந்த பிக்போஸ் நிகழ்ச்சிகளில் இலங்கை போட்டியாளர்களைக் கொண்டுவந்து புலம்பெயர் மக்களையும் தொலைக்காட்சிக்குள் மூழ்க வைத்தது போன்று இந்த வருடமும் மேலும் ஒரு படி மேலே சென்று திருநங்கையை களமிறக்கியுள்ளனர்.
ஆம், இலங்கையைச் சேர்ந்த ஜேர்மனியில் வசித்துவரும் ஆடை வடிவமைப்பாளரும், மோடலிங் செய்யும் பெண்ணான மதுமிதா ரகுநாதன் என்பவரையும் களமிறக்கி, இலங்கையரையும், புலம்பெயர் மக்களையும் தன்பால் ஈர்க்கத் தொடங்கிவிட்டது விஜய் டீவி.
அதேபோன்று திருநங்கையாகிய ஒரு அழகியையும் நிகழ்ச்சிக்குள் புகுத்திவிட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, கடந்த காலங்களில் சன் டிவி மூலம் குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை இமான் அண்ணாச்சியைக் கண்டாலே ஒருகணம் தொலைக்காட்சி முன் தன்னிலை மறந்து ரசிக்க வைத்தவர். அவரையும் நிகழ்ச்சிக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அதேபோல,தன் குறும்புகளால் பலகோடி மக்களை ரசிக்க வைத்திருக்கும், காமெடி க்கு பஞ்சமே இல்லாமல், கள்ளங்கபடமின்றி அனைத்தையும் வெளிப்படையாக பேசி, eப்போதுமே சோறுதான் முக்கியம் என தன்னைத் தானே கலாய்த்து அனைவரையும் சிரிக்க வைக்கும் பிரியங்கா தேஷ்பாண்டியையும் உள்ளிறக்கியுள்ளனர்.
இவ்வாறு மக்கள் அனைவரையும் ஏதோவொரு விதத்தில் கவர்ந்திழுக்ககூடிய வகையில் ஒவ்வொரு போட்டியாளர்களையும் தேர்ந்தெடுத்து 100 நாட்களுக்கு பிக்போஸ் வீட்டுக்குள் அனுப்பி பலகோடி மக்களை தன்னகர்த்தே ஈர்த்திருக்கும் விஜய் டீவியின் யுக்தி யாருக்காவது வருமா என்ன....
வெல்லப்போவது யார்.. பொறுத்திருந்துதான் பார்ப்போமே...