பருத்தித்துறை நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்த நபர்களுக்கு நேர்ந்த கதி

#Jaffna #Point-Pedro
Prathees
4 years ago
பருத்தித்துறை நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்த நபர்களுக்கு நேர்ந்த கதி

பருத்தித்துறை மாவட்ட நீதிபதியை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் இன்று (04) மாலை 4.20 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

இணுவில்இ வவுனியா மற்றும் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 31இ33 மற்றும் 36 வயதுடையவர்களே  இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

பருத்தித்துறை மாவட்ட நீதிபதி காரில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை முதன்மை வீதியில் பயணித்தவேளை முச்சக்கர வண்டியில் பயணம் செய்த மூவர், நீதிபதியை அவமதிக்கும் வகையில் கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளனர்.

இதனைடுத்து, சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் இருந்த வீதித் தடையில் கடையிலிருந்த பொலிஸார் மூவரையும் கைது செய்தனர்.

மூவரும் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்க்ப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4