டிக்டாக்கினால் நேர்ந்த விபரீதம்:23 காந்தங்களை ஒரே நேரத்தில் விழுங்கிய சிறுமி..

Keerthi
4 years ago
டிக்டாக்கினால் நேர்ந்த விபரீதம்:23 காந்தங்களை ஒரே நேரத்தில் விழுங்கிய சிறுமி..

இங்கிலாந்தில் 6 வயதுடைய ஒரு சிறுமி 23 காந்தங்களை விழுங்கியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுமி, டிக்டாக்கில் ஒரு சவாலை மேற்கொண்டுள்ளார். அதற்காக, 23 காந்தங்களை ஒரே சமயத்தில் விழுங்கியிருக்கிறார். இதனால், சிறுமி வயிற்றுவலி, குமட்டல் மற்றும் வாந்தியால் அவதிப்பட்டுள்ளார். எனவே, சிறுமியின் பெற்றோர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்தனர். அதன்பின்பு, வயிற்றிலிருந்த 23 காந்தங்களை அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர். இருப்பினும் குடலுக்கு இடையில் காந்தங்கள் மாட்டிக் கொண்டதில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

சரியான நேரத்தில் சிறுமியை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லையெனில் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தற்போது பல முயற்சிகளுக்குப் பின்பே சிறுமி நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4