40,000 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த‌ நியாண்டர்தால் மனிதர்கள் வசித்த குகை கண்டுபிடிப்பு

Keerthi
4 years ago
40,000 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த‌ நியாண்டர்தால் மனிதர்கள் வசித்த குகை கண்டுபிடிப்பு

பல லட்சம் ஆண்டு ப‌ரிணாம வளர்ச்சியில் பல்வேறு உயிரினங்கள் அடியோடு அழிந்து போய் விட்டது. அப்படி அழிந்த இனம்தான் நியாண்டர்தால் மனிதர்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிகாலத்தில் வாழ்ந்த‌ இந்த நியாண்டர்தால் மனிதர்கள் பூமியில் வாழ்ந்தனர்.

40,000 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த‌ ஒரு குகை ஒன்று பிரிட்டன் ஜிப்ரால்டர் பகுதியில் உள்ள 'வான்கார்ட் குகை' பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த தொல் பொருள்கள் மூலம் ' பண்டைய காலத்தில் வாழ்ந்த‌ நியாண்டர்தால் எனும் மனித இனம் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகள் கிடைக்கலாம்' என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜிப்ரால்டர் தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குனர் கிளைவ் ஃபின்லேசன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது இந்த குகை பகுதியை கண்டுபிடித்தனர். '43 அடி நீளம் கொண்ட இக்குகையின் உள்ளே விசித்திரமான பொருள்கள் தொங்குவதை பார்த்தனர்.

குகை அறையின் மேற்பரப்பில் கழுதைப்புலிகள் மற்றும் கழுகுகளின் எச்சங்களையும், கடல் நத்தையையும் 4 வயது நியாண்டர்தால் மனித பல் ஒன்றையும்' கண்டுபிடித்தனர். இது கோர்ஹாமின் குகை வளாகம் என்று அழைக்கப்படுகிறது,

சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால்கள் அழிந்துபோவதற்கு முன்பு வாழ்ந்த கடைசி இடங்களில் ஒன்றாக இந்த குகை இருந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4