வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பயணிப்பவர்களுக்கான நடைமுறையை மாற்றுமாறு கோரிக்கை!

#SriLanka #Tourist
Yuga
4 years ago
 வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பயணிப்பவர்களுக்கான நடைமுறையை மாற்றுமாறு கோரிக்கை!

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான நடைமுறையை மாற்றுமாறு மருத்துவ துறையினரால் கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

பல்வேறு வளர்ந்த மற்றும் சக்திவாய்ந்த நாடுகளின் உதாரணங்களை மேற்கோள் காட்டி, சுகாதார நிபுணர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கொவிட் -19 விதிமுறைகளின் விளைவாக நாடு பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

பிசிஆர் சோதனைகளுக்கு உட்படுத்தாமல் சுற்றுலா பயணிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பது அத்தகைய ஒரு முடிவு என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.
பல்வேறு நிபுணர்கள் தங்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கின்றரர் என அச்சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பிசிஆர் சோதனைகளுக்கு உட்படுத்தாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் முடிவு நாட்டில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சாதகமாக இருக்காது.

தங்கள் முடிவை ஆதரிக்க வல்லுநர்கள் இங்கிலாந்தை உதாரணமாகக் கூறியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்கிலாந்து இந்தியாவை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கியது, மேலும் இந்தியர்களுக்கு தனி நிபந்தனைகளை விதித்தது.

விதிகளை தளர்த்துவதற்கு முன்னர் இங்கிலாந்து ஏனைய அனைத்து நாடுகளையும் ஆய்வு செய்துள்ளது.

அத்துடன் இலங்கை மற்றும் பிற நாடுகளிலுள்ள கொவிட் நிலைமை பற்றி அறிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கிலாந்து அனைத்து நாடுகளையும் சிவப்பு, அம்பர் மற்றும் பச்சை வலயங்களாக வகைப்படுத்தியுள்ளதாகவும், எனினும் இலங்கை அத்தகைய ஆராய்ச்சியை முன்னெடுக்கவில்லை.

இலங்கைக்கு அத்தகைய வகைப்பாடு இல்லை என்றும், இப்போது இங்கிலாந்து மற்றும் இந்தியாவை உதாரணமாக எடுத்துக் கொண்டு நாட்டையும் மக்களையும் ஆபத்தில் தள்ளியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4