குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!

#SriLanka #Death #Covid 19
Yuga
4 years ago
குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!

குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் மரணமானதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ள குறித்த பெண்ணுக்கு, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹப்புத்தளை – தொட்டலாகலை பகுதியில் கடந்த 29ஆம் திகதி தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய 14 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியிருந்தனர்.

அவர்களில் ஹப்புத்தளை – பிட்டரத்மலை பகுதியைச் சேர்ந்த 49 வயதான பெண்ணொருவரே இவ்வாறு மரணித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மரண பரிசோதனைகளின் பின்னரே உயிரிழந்தமைக்கான காரணத்தை வெளிப்படுத்த முடியும் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4