இலங்கையில் சீனி இறக்குமதி செய்வதில் சிக்கல்?

#SriLanka #sugar
Yuga
4 years ago
இலங்கையில்  சீனி இறக்குமதி செய்வதில் சிக்கல்?

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியால் இந்திய விநியோகஸ்தர்கள் இலங்கைக்கு சீனி வழங்க தயங்குவதாக இலங்கை சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டொலர் பற்றாக்குறையால் வணிக வங்கிகள் சீனி இறக்குமதி தொடர்பான கோப்புகளை ஏற்க தயங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

சீனி இறக்குமதியை அரசாங்கம் மீண்டும் அனுமதித்தாலும், டொலர் பற்றாக்குறையால் இறக்குமதியாளர்கள் பல சிக்கல்களை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சீனியின் விலை உயர்ந்துள்ளதால் இலங்கையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் சீனியை விற்க முடியாது என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4