காதல் விவகாரத்தால் இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை!

Prabha Praneetha
4 years ago
காதல் விவகாரத்தால் இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை!

காதல் விவகாரத்தால் இளைஞர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கேகாலை மாவட்டம், ரூவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெருஹேன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

வஹரக பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கரவனெல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4