அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை வழங்கும் முறையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!
குடியேறிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே குடியுரிமை பெறும் உரிமையைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு, ட்ரம்பின் உத்தரவுக்கு ஆதரவாக மூன்று தீர்ப்புகளையும், எதிராக ஆறு தீர்ப்புகளையும் வழங்கியது.
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கும் 150 ஆண்டுகள் பழமையான ஒரு முன்னுதாரணத்தை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.
சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிக விசாக்களிலோ நாட்டில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவதாக ட்ரம்ப் முன்னதாக ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
இருப்பினும், ட்ரம்பின் இந்த முடிவுக்கு அமெரிக்க குடிமை உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அதன்படி, அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகளைத் தாக்கல் செய்தனர். அதன்படி, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை அறிவித்து,
ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்த உச்சநீதிமன்றம் குடியேறிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கான அமெரிக்கக் குடியுரிமை முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே