மின்னல் தாக்கி விவசாயி பரிதாப மரணம்!

#SriLanka #Death
Yuga
4 years ago
மின்னல் தாக்கி விவசாயி பரிதாப மரணம்!

அம்பாறை மாவட்டம், திருக்கோயில், சாகாமம் பகுதியில் மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சாகாமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து மோகனராசா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது மகனின் வயலில் வரம்பு கட்டிக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளார்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4