பல வீடுகளில் கொள்ளையிட்ட நபர் சிஐடியினரிடம் சிக்கினார்

#Arrest #Police
Prathees
4 years ago
பல வீடுகளில் கொள்ளையிட்ட நபர் சிஐடியினரிடம் சிக்கினார்

மிரிஹான மற்றும் தலங்கம பொலிஸ் பிரிவுகளில் வெளிநாட்டு பணம் மற்றும் நகைகளைக்  கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் பிரிவுகளில் உயர் நீதிமன்ற நீதிபதியின் வீடு, விமானியொருவரின் வீடு மற்றும் மாலைதீவு பிரஜை தங்கியிருக்கும் வீடு ஆகியவற்றில் இர நேரத்தில்  கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சுமார் 1.5 மில்லியன் ரூபாய் வெளிநாட்டு பணத்தையும் உள்ளூர் பணமும் தங்க நகைகளையும் குறித்த நபர் திpருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ரூ. 09 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்துடன் சந்தேக நபர் நுகேகொட சிஐடியால் கைது செய்யப்பட்டார்.

குறித்த் பகுதிக்குப் பொறுப்பான  குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஓஐசி உட்பட அதிகாரிரகள் குழு  இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது  சிகேரா சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நகரும் முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

இதன்போது முச்சக்கர ரவண்டி சாரதியிடமிருந்து 05 கிராம் 470 மில்லிகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பின்னர் சந்தேக நபர் சிஐடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை  செய்யப்பட்டதில், பல திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4